india

img

மத்தியப் பிரதேசம்: பெட்ரோல் விலை ரூ.120ஐ தாண்டியுள்ளது!

மத்தியப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தின் அனுபூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயை தாண்டியும், டீசல் லிட்டருக்கு 110 ரூபாயை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 116.62 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 106.01 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆந்திர மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 114 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 107.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

;